animal husbandry
பறவை இனங்கள் :: கோழி வளர்ப்பு :: இனங்கள் முதல் பக்கம்

கோழி இனங்கள்

கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் வகிக்கின்றது. தற்போது இறைச்சிக்கோழி உற்பத்தி ஆண்டு வளர்ச்சியில் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே கோழி வளர்ப்பு தேசியக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும் தொழிலாகவும் இருக்கிறது.

இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்

  • முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு.
  • வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே.
  • அதிக அளவுக்  கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும்.
  • இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம்.
  • குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம்.
  • ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை மலிவாக இருப்பதால் அதன் தேவை அதிகமாக உள்ளது.

கோழி இனங்களின் வகைப்பாடு

1.அமெரிக்க இனங்கள்

புதிய ஹேம்ப்ளையர் வெள்ளை விளை மொத்ராக் சிவப்பு ரோட்ஜலேன் வையான்டேட் II

2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள்

லெஹார்ன் மினோர்க்கா அன்கோனா

இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி  செய்யக்கூடியவை.

3.ஆங்கில இனங்கள்

ஆஸ்டிராலார்ட் சுஸெக்ஸ் ஒர்பிங்டன்

இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம்

4. ஆசிய இனங்கள்

பெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.

5. இந்திய இனங்கள்

ஆசில் (சண்டைக்கோழிகள்) கடக்னாத்பர்ஸா

வியாபார இறைச்சிக் கேரழி இனங்கள்

காப், ஹப்பர்டு, லோமேன், அனக் 2000, ஏவியன் 34, ஸ்டார்பிரா, சேம்ராட்.

முட்டையிட ஏற்ற இனங்கள்

எ.கா பிவி 300, போவான்ஸ், ஹைலின், ஹச் மற்றும் என் நிக், டீகால் லொஹ்மேன்.

இறைச்சிக் கோழி

இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்ாக அனுப்பப்படுகின்றன.

வளரும் பருவக் கோழிகள்

முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.

முட்டையிடும் கோழிகள்

முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.
(ஆதாரம்: டாக்டர். பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.)

கோழிக்குஞ்சு இனங்கள்

கோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை வெள்ளை பெய் இனங்கள் நிறமுடைய வெள்ளை இனங்கள்.

இந்தியாவின் முட்டையிடும் கோழி இனங்கள்


இனங்கள்
உடல் எடை (20 வாரங்கள்) பருவ வயது அடையும் காலம் (நாட்கள்) ஆண்டு முட்டை உற்பத்தி  (எண்ணிக்கையும்) 40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) உற்பத்தித் திறன் பொரிக்கும் திறன்
(FES(5)
அசீல் 1220 196 92 50 66 63
ஃபிரிஸில் 1005 185 110 53 61 71
கடக்னாத் 920 180 105 49 55 52
திறந்த கழுத்து (நெக் டு நெக்) 1005 201 99 54 66 71

(ஆதாரம்: மத்திய ஏவியன் ஆராய்ச்சி நிலையம்)

நம்நாட்டு இனங்கள்

சாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில  வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. இவைக் குறைந்த உற்பத்தித் திறனே பெற்றுள்ளன. உள்ளூர் இனங்களான டெனிஸ், காஷ்மீர், ஃபேடரெல்லா, டில்ரி, பர்ஸா, டெல்லிச்சேரி, டான்கி, நிக்கோரை, காலஹஸ்தி போன்ற சில தூய இனங்களே உள்ளன., பல வகை  கலப்பு இனங்கள் வளரும் இடங்களுக்குத் தகுந்தவாறு பல நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றில் அசீல், சிட்டாகாங், லாங்ஸான், பிரம்மா இரத்தம் போன்றவை நல்ல உற்பத்தியுள்ள வளாக்கக்கூடிய இனங்களாகும்.

அசீல்

இக்கோழிகள் இதன் ஆற்றலுக்கும், சண்டைத் தன்மைக்கும், புகழ் பெற்றவை. இவை ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் காணப்படுகிறது. நன்கறியப்பட்ட  இனங்களான (பொன்னிறச்சிவப்பு), யார்க்கின் (கருப்பு சிகப்பு), நியூரி 89 (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கறுப்பு, வெள்ளை) டீக்கர் (செம்பழுப்பு) ரெசா (இளம் சிவப்பு) போன்றவை குறைந்த உற்பத்தித் திறனே கொண்டாலும் தரம் மிக்கவை. நன்கு குஞ்சு பொரிக்கும் திறன் பெற்றவை. கொண்டை சிறிதாக தலையுடன் நன்கு அமைந்திருக்கும். கோழித் தாடி, காதுகள் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்கள் பெரிதாகவும் நல்ல பார்வைத்திறனுடன் இருக்கும். கழுத்து நீண்டு, சதையற்றதாக இருக்கும், உடலமைப்பு உருண்டையாகவும், மார்பகம் அகன்றும் முதுகு நேராகவும் உடலுடன் நெருக்கமாக அமைந்திருக்கும். மார்புப் பகுதியில் அதிக இறக்கைகள் இருக்காது. இறக்கைகள் கடினமாகவும் சிறகுத் துகளின்றிக் காணப்படும். வால் சிறியதாக சரிந்தும் கால்கள் நேராக, வலிமையானதாக சிறிது இடைவெளி விட்டுக் காணப்படும். சராசரி உடல் எடையளவு கிலோகிராமில் சேவல் 4-5, பெட்டைக் கோழி 34-, சேவல் குஞ்சு 3-5,4-5 பெட்டைக்குஞ்சு 2-5,3-5


அசீல்

(ஆதாரம்: டாக்டர். ஆச்சார்யா, Handbook of Animal Husbandry)

கடக்னாத்

இதன் உண்மைப் பெயர் காலம்சி எனப்படுகிறது. கருப்புச் சதையாலான கிண்ணம் போன்ற அமைப்பு என்பது இதன் பொருள் முட்கைள் சிறிது பழுப்பு நிறம் கொண்டவை. ஒரு நாள் வயதுக் குஞ்சு நீலம் கலந்த நிறத்தில் பின்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகளுடன் இருக்கும். பெரிய கோழியின் இறக்கை வெள்ளைநிறத்திலிருந்து தங்க நிறம் வரை பல நிறங்களில் வேறுபட்டுக் காணப்படும். தோல், பாதம், அலகு விரல்கள் சிலேட்டு நிறத்தில் காணப்படும். கொண்டை, தாடி, நாக்கு ஆகியவை கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். மேல் மூச்சுக் குழல், வயிற்றுக் காற்றரைகள், மார்புக் கூடு போன்ற உட்புற உறுப்புகள் கருமைக் கலந்த நிறத்துடன் இருக்கும்.  மூளை, மூளை உறைகள், நரம்புகள், எலும்புக் கூட்டுத் தசைகள், போன்றவையும் கருமைக் கலந்து காணப்படும். மெலனின் படிவதால் இரத்தம் கூட நிறமிகளைப் பெற்று கருஞ்சவப்பு நிறத்தில் தான் இருக்கும். சாதாரணக் கோழி வருடத்திற்கு 80 முட்டைகள் இடும். இக்கோழி இதன் இயற்கைச் சூழலில் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும். ஆனால் கூண்டில் அடைத்து வளர்க்கும் போது வாத நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.


கடக்னாத்
Nakedneck
நேகேட் நெக்
( புகைப்பட ஆதாரம் : KVK நாமக்கல் )

புகைப்பட ஆதாரம்: நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையம்.

(தகவல்: www.vuatkerala.org)

இந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்

இனங்கள்
6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) 7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) உணவை மாற்றும் தன்மை வாழ்திறன் (சதவீதம்)
எல்ஏ 77 1300 1600 2.3 98-99
காரிபிரோ 91 1650 2100 1.94-2.2 97-98
காரிபிரோ (பலநிறம் கலந்தது) 1600 2000 1.9-2.1 97-98
காரிபிரோ நேக்டு நெக் 1650 2000 1.9-2.0 97-98
வார்னா 1800 1800 2.1-2.25 97

 


இனங்கள்
முதல் முட்டை (வாரங்களில்) 50 சதவிகித உற்பத்தி அதிக உற்பத்தி (வாரம்) வாழும் திறன் (சதவீதத்தில்) அதிக முட்டை உற்பத்தி (சதவீதத்தில்) தீவனம் உட்
கொள்ளும் திறன்
முட்டை எடை
(கிராமில்)
சராசரி முட்டை உற்பத்தி
ஐஎல்ஐ 80 17-18 150 நாட்கள் 26-28 வளரும் கோழி (96) முட்டையிடும் கோழி (94) 92 2.1 54 280 முட்டைகள்
கோல்டன் 92 18-19 155 நாட்கள் 27-29 வளரும் கோழி (96) முட்டையிடுபவை (94) 90 2.2 54 265 முட்டைகள்
பிரியா 17-18 150 நாட்கள் 26-28 வளரும் கோழி (96) முட்டையிடும் கோழி (94) 92 2.1 57 290 முட்டைகள்
சோனாலி 18-19 155 நாட்கள் 27-29 வளரும் கோழி (96) முட்டையிடும் கோழி (94) 90 2.2 54 275 முட்டைகள்
தேவேந்திரா 18-19 155 நாட்கள் 27-29 வளரும் கோழி (97) முட்டையிடும் (94) 90 2.5 50 200 முட்டைகள்

(ஆதாரம்:மத்திய ஏவியான் ஆராய்ச்சி நிலையம்)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15